News Just In

2/28/2026 01:51:00 PM

நோன்பு மாதத்தை முன்னிட்டு சுகாதார பணியாளர்களுக்கு புதிய மேலங்கி அறிமுகம்

 நோன்பு மாதத்தை முன்னிட்டு சுகாதார பணியாளர்களுக்கு புதிய மேலங்கி அறிமுகம்


நூருல் ஹுதா உமர்

மனிதநேயம், ஒற்றுமை மற்றும் சேவை உணர்வை உயர்த்திப் பேசும் புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு, களப் பணிகளை மேலும் செயல்திறன் மிக்கதாகவும் உற்சாகமூட்டுவதாகவும் மாற்றும் நோக்கில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக புதிய மேலங்கி வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது புதிய மேலங்கிகள் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

நோன்பு மாதம் கருணை, பகிர்வு மற்றும் சமூகப் பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் காலமாக இருப்பதை குறிப்பிட்ட டாக்டர் ஜே. மதன் அவர்கள், இந்த காலப்பகுதியில் சமூக நல சேவைகளை அதிக அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் மேற்கொள்ளுமாறு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

புதிய மேலங்கிகள் களப்பணிகளில் ஒருமைப்பாட்டையும் ஒழுங்கையும் பிரதிபலிப்பதுடன், பொதுமக்களுக்கு தரமான மற்றும் நம்பகமான சேவைகளை வழங்குவதற்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

No comments: