தீவிர அரசியலில் இருந்து விலகும் ரணில்...! மகாநாயக்கர்களை சந்தித்த பின் அறிவிப்பு
தீவிரமான அரசியலில் இனிமேல் தான் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கண்டிக்கு நேற்று (23.01.2026) காலை விஜயம் செய்து மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களை வணங்கி அவர்களின் ஆசிகளை அவர் பெற்றார்.
இந்த விஜயத்தின் போது அவர் மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் திப்போட்டுவாவே ஸ்ரீசுமங்கல தேரரைச் சந்தித்தார்.பின்னர் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரைச் சந்தித்தார்.
இந்தக் கூட்டத்தின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து மகாநாயக்க தேரர்களுடன் விக்ரமசிங்க கலந்துரையாடினார் என தெரிவிக்கப்படுகின்றது.
கலந்துரையாடல்களுக்குப் பிறகு அரசியல் விடயங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி கேட்க முயன்ற போது அவர்களின் கேள்விகளுக்குச் சுருக்கமாக பதிலளித்து தான் இனி தீவிர அரசியலில் ஈடுபடவில்லை என்று கூறினார் ரணில் விக்ரமசிங்க.

No comments: