வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது!
வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்த போராட்டம் இன்று சனிக்கிழமையும் (24) தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரசு இதுவரை தங்கள் பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வொன்றை வழங்கவில்லையென அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து திங்கட்கிழமை தீர்மானிக்கப்படும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உதவியற்ற நிலையில் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
1/24/2026 09:28:00 AM
வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் இன்றும் தொடர்கிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: