News Just In

1/23/2026 03:59:00 PM

சாளம்பங்கனி ஸாஹிரா மற்றும் இமாம் கஸ்ஸாலி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்


சாளம்பங்கனி ஸாஹிரா மற்றும் இமாம் கஸ்ஸாலி பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்



நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட சாளம்பங்கனி ஸாஹிரா பாலர் பாடசாலை மற்றும் இமாம் கஸ்ஸாலி பாலர் பாடசாலையில் புதிதாக இணைந்த மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர், பாலர் பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். சிறுவர்களின் கல்விப் பயணத்தை உற்சாகமாக ஆரம்பிக்க இத்தகைய முயற்சிகள் முக்கியமானவை என அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மேலும், ஆரம்பக் கல்வி கட்டமே ஒரு குழந்தையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அடித்தளமாக அமைகின்றது என்றும், மாணவர்களின் திறன், ஒழுக்கம் மற்றும் அறிவு வளர்ச்சிக்காக பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்வின் போது மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, கற்றல் உபகரணங்களைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜொகநாதன் உட்பட நளீர் பௌண்டஷன் நிர்வாகிகள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், பாடசாலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வு, பாலர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு ஊக்கமளிக்கும் ஒரு முக்கியமான முயற்சியாக அமைந்தது.

No comments: