நூருல் ஹுதா உமர்
மருதமுனை அந்-நஹ்ழா அரபுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் உஸ்தாத்மார்களுக்கான இலவச வைத்திய பரிசோதனை மற்றும் சுகாதார வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று காலை (23.01.2026) கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு வளவாளராக, அந்-நஹ்ழா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட நிர்வாக சபை உறுப்பினரும், ஓய்வுபெற்ற வைத்தியருமான எஸ்.ஏ.ஆர்.எம்.எஸ்.எம்.மௌலானா அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.
நிகழ்வின் போது மாணவர்கள் மற்றும் உஸ்தாத்மார்களுக்கு இலவசமாக உடல் ஆரோக்கிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள், நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் தினசரி சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாக பயனுள்ள வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் கல்வி முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமானது என்பதை வலியுறுத்திய சிறப்பு வளவாளர், சுகாதார விழிப்புணர்வை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.
கல்லூரி நிர்வாகம், உஸ்தாத்மார்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி, அனைவரிடமும் சிறந்த வரவேற்பைப் பெற்றது.
No comments: