சாய்ந்தமருதைச் சேர்ந்த ஓய்வுநிலை கல்வி அதிகாரியும், சிரேஷ்ட எழுத்தாளருமான ஏ. பீர் முகம்மது அவர்கள், தான் சேகரித்த நூல்கள் உள்ளிட்ட பெறுமதியான ஒரு தொகுதி நூல்களை சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஊடாக கமு/கமு/ மழ்ஹருஷ் ஷம்ஸ் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைத்தார்.
பாடசாலை மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட இந்த நூல் அன்பளிப்பு நிகழ்வு, சாய்ந்தமருது பொது நூலகத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.
இதன்போது பாடசாலை அதிபர் எம்.சி. ரிப்கா அன்சார் மற்றும் உதவி அதிபர்கள், பாடசாலை நூலக பொறுப்பாசிரியை ஆகியோரிடம் நூல்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
இதன்போது எதிர்காலத்திலும் இவ்வாறான கல்விப் பணிகளைத் தொடரத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்த ஏ. பீர் முகம்மது அவர்கள், பிரதேசத்திலுள்ள ஏனைய பாடசாலை நூலகங்களுக்கும் இவ்வாறான நூல் அன்பளிப்புக்களை வழங்கத் தான் ஆலோசித்து வருவதாகவும் குறிப்பிட்டார்கள்.
ஓய்வுபெற்ற பின்னரும் கல்வி மற்றும் இலக்கியத் துறையில் இயங்கி வரும் இவரைப் போன்றவர்களின் இத்தகைய பங்களிப்புக்கள், மாணவர் சமூகத்தின் அறிவுப் பசிக்கு பெரும் துணையாக அமைவது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
No comments: