News Just In

1/18/2026 12:48:00 PM

வவுனியாவில் அவசரமாககூடிய சங்கு கூட்டணி; மாகாணசபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

வவுனியாவில் அவசரமாககூடிய சங்கு கூட்டணி; மாகாணசபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்




ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுவருகின்றது.

கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமசந்திரன், மு.சந்திரகுமார், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம்,ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி, முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

2026ஆம் ஆண்டில் கூட்டணியின் அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும், மாகாணசபை தேர்தல் உட்பட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments: