News Just In

1/18/2026 12:51:00 PM

விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த 2000க்கு மேற்பட்ட மின்சார சபை ஊழியர்கள் வாழ்வாதாரம் குறித்து கவலை ; ஜனாதிபதிக்கு அவசர கடிதம்


விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த 2000க்கு மேற்பட்ட மின்சார சபை ஊழியர்கள் வாழ்வாதாரம் குறித்து கவலை ; ஜனாதிபதிக்கு அவசர கடிதம்



இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பின் கீழ் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்த 2,200 ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் விடயத்தில் கவனம் செலுத்துமாறு மின்சார சபை ஊழியர்கள், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடிதத்தில், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தாங்கள் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு இணையாக தங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தை திட்டமிட்டுள்ளதாகவும், மறுசீரமைப்பு செயல்முறை நாளுக்கு நாள் தாமதமாகி வருவதால் தாங்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்ட திகதி அறிவிக்கப்படும் வரை, மின்சார சபையை விட்டு வெளியேறி தங்கள் புதிய திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்று ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்த ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த திகதியை அறிவிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முடிக்கப்பட்டுள்ளதாகவும், மின்சாரத்துறை சீர்திருத்த செயலாளர் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் புபுது நிரோஷன் ஹெடிகல்லகே தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைக்கும்போது தங்களுக்குத் தெரிவித்துள்ளதாகவும் ஊழியர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: