News Just In

11/05/2025 10:42:00 AM

நீதிபதி இளஞ்செழியனுக்கு எதிராக திட்டமிட்டு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை .அரச தரப்பு நியாயம்

நீதிபதி இளஞ்செழியனுக்கு எதிராக திட்டமிட்டு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை .அரச தரப்பு நியாயம் 





நீதிபதி இளஞ்செழியனுக்கு எதிராக திட்டமிட்டு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், தனது பதவி உயர்வு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதுடன், "முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் அவரது சேவைகள் தொடர்பில் சமூகத்தில் மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது. இவரைப் போன்று பல அரச அதிகாரிகள் காணப்படுகின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் சேவை நீடிப்புக்கள் வழங்கப்படும் போது பல விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற கட்டமைப்பிற்குள் அடுத்தடுத்த நிலைகளுக்கு பதவியுயர்வு பெற வேண்டியவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படக் கூடும்.

அவ்வாறான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருந்திருக்கலாம். மாறாக திட்டமிட்டு அவருக்கான சேவை நீடிப்பு வழங்கப்படாமல் இருக்கவில்லை.

இது வழமையான நடைமுறையாகும். சில துறைகளில் சேவை நீடிப்புக்கள் வழங்கப்பட்டிருக்குமாயின், அங்கு பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களுக்கு பொறுத்தமானவர்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். எனவே தான் அங்கு ஓய்வு பெறவிருந்த அதிகாரிகளுக்கு பதவி நீடிப்பு வழங்கப்பட்டிருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

No comments: