News Just In

10/21/2025 08:28:00 AM

ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த இரு நாய்கள் சாவு!

ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த இரு நாய்கள் சாவு!




தங்காலை துறைமுகத்தில் இருந்த ஐஸ் போதைப்பொருள் கலந்த நீரை குடித்த, ஐந்து நாய்களில் இரண்டு நாய்கள் உயிரிழந்துள்ளதாக தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

தங்காலை துறைமுகத்தில் கடந்த 14ஆம் திகதி கடலில் மிதந்த 51 பொதிகளில் இருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

பொதிகள் கைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த நீரை குடித்த ஐந்து நாய்கள் சுயநினைவின்றி ஒரே இடத்தில் சுற்றித்திரிந்த நிலையில் தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் அவற்றுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

எவ்வாறிருப்பினும் அவற்றில் இரண்டு நாய்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளன.

ஏனைய நாய்கள் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தங்காலை கால்நடை வைத்தியசாலையின் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: