
வைத்தியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
வைத்தியர்களின் இடமாற்றங்களை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹன்சமல் விஜேசூரிய தெரிவித்துள்ளதாவது,
இடமாற்றப் பட்டியல் பிரச்சினைகளில் சுகாதார அமைச்சு முறையாகத் தலையிடவில்லை என்றால் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
சுகாதார அமைச்சுக்கு நாங்கள் ஒரு காலக்கெடுவை வழங்கியுள்ளோம். நாங்கள் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளோம்.
ஆனால் இந்த அதிகாரிகள் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள்.
எதிர்வரும் 11ஆம் திகதி காலை 8.00 மணிக்குள் இது தொடர்பாக சுகாதார அமைச்சு நேர்மறையான தலையீட்டைச் செய்யத் தயாராக இல்லை என்றால், அதன்படி நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்- என்று தெரிவித்துள்ளார்.
No comments: