காத்தான்குடி நகர சபை உறுப்பினர் கலீல்பாரி கைது!

காத்தான்குடி நகரசபையின் சுயேச்சைக்குழு உறுப்பினர் முஹம்மது பாறூக் கலீல்பாரி காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.ஐ.ரத்னாநாயகா தெரிவித்தார்.
அவருடன் அவரது சுயேற்சைக்குழுவில் அவரது அணியில் போட்டியிட்ட முஹமட சிராஜ் மற்றும் ஆதரவாளரான நாசர் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காத்தான்குடி நகர சபைக்கு சொந்தமான வடி கான் மூடியொன்றை நகர சபையின் அனுமதியின்றி கையாண்டார்கள் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்
No comments: