News Just In

7/25/2025 09:23:00 PM

சனி, ஞாயிறு தினங்களில் கிழக்கில் இலவச உயர் கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கு!

இலவச உயர்கல்விக்கான வழிகாட்டல் கருந்தரங்கு செசெக்ஸ் (Sussex Campus) கம்பஸின் ஏற்பாட்டில் நாளையும், நாளை மறுதினமும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு டாக்டர் ஜெமீல் வைத்தியசாலை சாய்ந்தமருது கிளை கேட்போர் கூடத்தில் (24) இடம்பெற்றது.

யுனி ஸ்மார்ட் யூ.கே (UniSmart UK) மற்றும் Sussex Campus இன் தவிசாளர் கலாநிதி பொறியியலாளர் ஏ.எம்.ஐ. ஸாதிக் இந்த உயர் கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கு தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கையின் கல்வி முறை, பல்கலைக்கழக தெரிவு, தொழிற்சந்தை, வெளிநாட்டு கற்கைகள், வெளிநாட்டு பல்கலைக்கழக தரவரிசை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டிய சீர்திருத்தம், கொள்கைகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டார்.

மேலும் எதிர்வரும் சனிக்கிழமை (26), காலை 10 மணிக்கு கல்முனை அஸாத் பிளாசா மண்டபத்திலும், மாலை 04 மணிக்கு அக்கரைப்பற்று ஹல்லாஜ் மண்டபத்திலும் மறுநாள் 27ம் திகதி ஞாயிறு மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு கிரீன் கார்டன் உணவகத்திலும், மாலை 07 மணிக்கு காத்தான்குடி நாஸ் கம்பஸிலிம் நடைபெற உள்ள இலவச உயர் கல்விக்கான வழிகாட்டல் கருத்தரங்கு தொடர்பிலும் கருத்துக்களை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் இந்த நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரிஹான் சாஹிர், இணைப்பாளர் அஸ்வர் றிஸ்வி, கிழக்கு மாகாண இணைப்பாளர் யஹ்யா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர்

No comments: