விசேட குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால், கருணாவின் முக்கிய சகாக்களில் ஒருவரான இனிய பாரதி இன்று கைது செய்யப்பட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், முனைக்காடு பகுதியில் வைத்து விசேட குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இனிய பாரதியின் கைதுக்கான காரணம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.
விடுதலை புலிகளின் காலப்பகுதிகளில் அரசுக்கு விசுவாசிகளாக இருப்பதற்காகவே பெரிதும் பேசப்படாத பிள்ளையான் இனிய பாரதி போன்றவர்கள் முக்கியஸ்தர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான ஒரு பின்னணியில் தான் இவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இனிய பாரதியின் கைதுக்கு பிரதான காரணம் காரைதீவில் இடம்பெற்ற ஐவரின் கொலையே என தகவர்கள் கூறுகின்றன.
காரைதீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர், கொலை செய்யப்பட்டு வீட்டின் கீழ் தளத்தில் புதைக்கப்பட்ட விவகாரத்தில் அரச சாட்சியாக மாறிய ஒருவர் வழங்கிய வாக்குமூலமே இனிய பாரதியின் கைதுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

No comments: