News Just In

7/06/2025 07:19:00 PM

மர்ஹூம் மயோன் முஸ்தபா கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம்!

மர்ஹூம் மயோன் முஸ்தபா கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதியாட்டம்!



நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது ஓ.ஜி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், மர்ஹூம் மயோன் முஸ்தபா கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நேற்று (04) சாய்ந்தமருது வொலிவேரியன் பொதுவிளையாட்டு மைதானத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.

இந்த இறுதி நாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. அஷ்ரப் தாஹீர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் கட்சியின் அதிகாரசபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹீர், கட்சியின் பிரதி செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், உயர்பீட உறுப்பினரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், கட்சியின் மாவட்ட செயற்குழு செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம். காதர், உயர்பீட உறுப்பினர் எஸ்.ஹமீட் ஆகியோருடன் விளையாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments: