News Just In

12/30/2024 04:21:00 PM

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனாவின் “சகோதர பாசம்” நிவாரணப் பொதி!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனாவின் “சகோதர பாசம்” நிவாரணப் பொதி


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவுப் பொதிகள் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸடினா ஜுலேகாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு வந்த சீனத் தூதுவர் கி சென்கொங் (Qi zhenhong) தலைமையிலான தூதுக் குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக “சீனாவின் சகோதர பாசம்" எனும் உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து 770 உலர் உணவுப் பொதிகள் மாவட்டச் செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நிவாரணப் பொதிகள் முதல் கட்டமாக மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட பெரிய உப்போடை கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு 6.500 ரூபாய் பெறுமதியான பொதிகள் பகிர்ந்தளித்தளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைகான சீனா தூதுவர் கீ சென்ஹொங்க்கு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்ரினா ஜுலேக்கா நினைவுச் சின்னம் ஒன்றினையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சீனத் தூதுவரின் பாரியார் ஜின் குவான், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலளார் கே.எம். அப்துல்லாஹ், மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி சிறிகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன், சீனத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments: