எதிர்கொள்ளப் போகும் மழை, வெள்ளம போன்ற இடர்களுக்கு முன்னாயத்தம் தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்குத் தெளிவூட்டும் இரு நாள் செயலமர்வு மட்டக்களப்பு ஈஸ்ற் லகூன் விடுதியில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு, மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, அக்டெட் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த செயலமர்வை நடாத்தின.
முதல் நாள் செயலமர்வினை மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா ஆரம்பித்து வைத்தார்.
இந்த செயலமர்வில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களம், நில அளவைத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், வானிலை அவதான நிலையம், பிராந்திய சுகாதாரப் பணிமனை, கால்நடை அபிவிருத்தித் திணைக்களம், கல்வித் திணைக்களம் உள்ளிட்ட மேலும் பல திணைக்களங்களின் உயரதிகாரிகள் உத்தியோகத்தர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உயரதிகாரிகள், அக்டெட் நிறுவனத்தின் உயரதிகாரிகள் ஆகியார் கலந்து கொண்டனர்.
இச்செயற்திட்டமானது கிரான், வெல்லாவெளி, வவுணதீவு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: