News Just In

11/28/2024 12:33:00 PM

முன்னாள் அமைச்சர், கிழக்கு அரசியலின் முதுசம் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் காலமானார்!

முன்னாள் அமைச்சர், கிழக்கு அரசியலின் முதுசம் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் காலமானார்.



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தனது 80ஆவது வயதில் வியாழனன்று 28.11.2024 காலமானார்.

இவர் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதியமைச்சராகவும் இராஜாங்க அமைச்சராகவும் பணியாற்றினார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரான இவர், அந்தக் காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர், மேலும் கட்சியின் அரசியலமைப்பை எழுதிய நபராகவும் நம்பப்படுகிறார்.

இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றிய அவர், ஏற்றுமதி அபிவிருத்தி, வெகுஜன ஊடகத் தகவல், கிராமிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற பல பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

வேதாந்தி என்று புனைப்பெரால் அழைக்கப்பட்ட இவர் கிழக்கு அரசியலின் முதுசம் என்று கருதப்படுகிறார். முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் செயற்பட்டுள்ளார். அடிப்படையில் ஒரு ஆசியராகவும் எழுத்தாளராகவும் கவிஞராகவும் இவர் செயற்பட்டு வந்துள்ளார்.

இவரின் மகள் ஹசனா சேகு இஸ்ஸதீன் பெண்ணிய ஆர்வலராகவும் வழக்கறிஞராகவும் தற்போதைய பிரதமரின் தனிப்பட்ட செயலாளராகவும் உள்ளார். இலங்கையில் நீதி மற்றும் சமத்துவத்திற்கான முஸ்லிம் பெண்கள் போராட்டம் என்ற நூலின் இணை ஆசிரியராவும் ஹஸனா செயற்பட்;டு வருகிறார்

No comments: