News Just In

10/23/2024 01:44:00 PM

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க விசேட தினங்கள் அறிவிப்பு!

வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க விசேட தினங்கள் அறிவிப்பு!




எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 03 ஆகிய தினங்களில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் தினங்களாக கருதப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சனிக்கிழமை தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் எனவும் பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்காளர் அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்டச் செயலகங்களில் இன்று இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: