வியாழேந்திரனுக்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் இல்லை! கோவிந்தன் கருணாகரம்
யாரும் எங்களுக்கு ஆதரவு தரமுடியும். எந்த ஆதரவினையும் நாங்கள் மறுக்கமாட்டோம். வியாழேந்திரன் ஆதரவு தருவதாக கூறியுள்ளார். அவருக்கும் எங்களுக்கும் இடையில் எந்த உடன்படிக்கையும் இல்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தனது பிரசாரப்பணிகளை ஆரம்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இதன்போது சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டதுடன் ஆதரவாளர்களுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டதுடன் இன்று (18) பிரசாரங்களையும் ஆரம்பித்து வைத்தார்
No comments: