(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) பழைய மாணவியும் உயர்தர உயிர் முறை தொழில்நுட்பப் பிரிவின் ஆசிரியையும், இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான இளமானி பட்டத்தரியுமான பாத்திமா றுஸ்தா றியாஸ் இலங்கை கல்வி நிர்வாக சேவை நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2023,2024ம் ஆண்டுகளில் இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் இவர் சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேர்மை, அர்ப்பணிப்பு, பொறுப்புணர்ச்சி, ஆளுமை, ஒழுக்கம், கல்வி அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அற்பணித்த கல்லூரி ஆசிரியை பாத்திமா றுஸ்தா றியாஸ் வாழ்த்தி பாராட்டி கெளரவிப்பதில் கல்லூரி அதிபர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் உள்ளிட்ட கல்வி சமூகம் பெருமிதம் கொள்கின்றது.
No comments: