News Just In

9/09/2024 08:28:00 PM

ஹட்டன் சதுரங்க சங்கம் நடாத்திய பாடசாலைகளுக்கிடையிலான சதுரங்க போட்டியில் அக்கரப்பத்தன ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலயம் பிரகாசிப்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே சதுரங்க விளையாட்டை பிரபல்யப்படுத்தி மாவட்ட , மாகாண தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மாணவர்களை பங்கேற்கச் செய்யும் நோக்கில் ஹட்டன் சதுரங்க சம்மேளனத்தால் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் சதுரங்க போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த போட்டி நிகழ்வுகளில்அக்கரப்பத்தன ஹோல்புறூக் தமிழ் மகா வித்தியாலய (விஞ்ஞான கல்லூரி) மாணவர்கள் தத்தமக்குரிய வயதிற்குட்பட்ட பிரிவில் பல்வேறு வெற்றிகளுடன் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பாடசாலை அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

No comments: