News Just In

8/21/2024 01:48:00 PM

கிழக்கு மாகாண மட்ட போட்டியில் வெற்றிபெற்ற அம்பாறை டி.எஸ்.சேனநாயக தேசிய கல்லூரி ஆண் பெண் ஹொக்கி அணிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு !



(அஸ்ஹர் இப்றாஹிம்)

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்,பெண் இருபாலாருக்குமான ஹொக்கி போட்டிகள் திருகோணமலை மெக்கெய்ஸர் விளையாட்டு மைதானத்தில் அண்மையில் (9) இடம்பெற்றது.

பெண்கள் பிரிவில் ஹொக்கி போட்டியில் கலந்து கொண்ட அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசியக்கல்லூரி முதலிடத்தைப் பெற்று சம்பியன்களாகவும், ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.இவ்விரு குழு மாணவர்களும் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்

No comments: