News Just In

8/27/2024 06:13:00 AM

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் மாலையானதும் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் காட்டு யானைகளால் மக்கள் அச்சம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் சிறுபோக வேளாண்மை அறுவடை தற்போது நிறைவடைந்துள்ளது.இந்த நிலையில் அம்பாறை மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களின் காட்டுப் பகுதியில் வசித்து வந்த காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக காரைதீவு பிரதேசம் வரை படையெடுக்க ஆரம்பித்துள்ளன.

இதனால் இரவு வேளைகளில் அக்கரைப்பற்று - கல்முனை வீதி , கல்முனை - அம்பாறை பிரதான வீதிகளில் தனியாக மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கூட்டமாக வரும் காட்டு யானைகள் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், குடியிருப்புகளுக்கும் பயனுள்ள தென்னை மரங்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த விடயத்தில் மக்களையும் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் காட்டு யானைகளின் படையெடுப்பை கட்டுப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட வன விலங்கு அதிகாரிகளைப் மக்கள் கேட்டுள்ளனர்.

No comments: