(அஸ்ஹர் இப்றாஹிம்)
தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் திகதி வரையிலான ஒரு வாரம் சர்வதேச தாய்ப்பாலூட்டல் வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
இதனையொட்டி சுகாதார அமைச்சினால் தாய்ப்பாலூட்டல் செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து இந்த மதிப்பீடு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கல்முனை பிராந்தியத்திலுள்ள குழந்தைப் பேறு இடம்பெறுகின்ற சகல வைத்தியசாலைகளிலும் இந்த மதிப்பீடு ஆரம்பிக்கப்பட இருப்பதனால் இது தொடர்பாக துறைசார்ந்த உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் வகையில் பயிற்சிக் கருத்தரங்கொன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
இந்தப்பயிற்சிக் கருத்தரங்கில் கல்முனை பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆறு வைத்தியசாலைகளின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தாய்ப்பாலின் மகத்துவம், தாய்ப்பாலால் ஏற்படும் உடல், உள மற்றும் ஆத்மீக நன்மைகள், தாய்ப்பாலூட்டல் சம்பந்தமான சட்ட கோவைகள், தாய் சேய் நேய வைத்தியசாலைக்குறிய 10 படிமுறைகள் எனும் தலைப்பில் விரிவுரையாற்றப்பட்டது. அத்துடன் குறித்த வேலைத்திட்டத்தினை இணையத்தின் ஊடாக மதிப்பீடு செய்வதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் டொக்டர் எஸ்.என்.றொஷான்ந், டொக்டர் எப்.எம்.ஏ.காதர், பிராந்திய தாய்சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்தியர் டொக்டர் எம்.எச்.றிஸ்பின், டொக்டர் ஏ.ஏ.யுரேன் இந்நிகழ்வில் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வானது சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: