News Just In

9/13/2026 01:50:00 PM

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ. பலத்த மழை - ஒரு சில பகுதிகளில் உஷ்ண நிலை; சில பகுதிகளில் சிறிதளவு மழை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ. பலத்த மழை
- ஒரு சில பகுதிகளில் உஷ்ண நிலை; சில பகுதிகளில் சிறிதளவு மழை





இன்றையதினம் (13) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ. அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருணாகல், மொணராகலை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பகல் வேளையில், வெப்பச் சுட்டெண், (மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை) ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

No comments: