News Just In

9/13/2026 04:46:00 PM

மாவடிப்பள்ளி ஆற்றில் இனந்தெரியாத ஆண் சடலம் கரையொதுங்கியது.!!

மாவடிப்பள்ளி ஆற்றில் இனந்தெரியாத ஆண் சடலம் கரையொதுங்கியது.!!


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.

சடலம் கரையொதுங்கியுள்ளமை தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காரைதீவு பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் காரைதீவு பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No comments: