News Just In

9/14/2026 05:16:00 AM

மஹிந்தவின் கூட்டத்தில் சிக்கிய இரகசிய வீடியோ ; அநுரவின் மிரட்டலால் கலக்கத்தில்

மஹிந்தவின் கூட்டத்தில் சிக்கிய இரகசிய வீடியோ ; அநுரவின் மிரட்டலால் கலக்கத்தில்



அனுராதபுரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடத்திய அரசாங்க எதிர்ப்பு பேரணியில் பங்கேற்ற சில ஆதரவாளர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், அவர்களுக்கு உணவுப் பொட்டலங்களுடன் மதுபானம் வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பேரணி நிறைவடைந்த பின்னர் மதுபோதையில் இருப்பதாகக் கூறப்படும் சிலரின் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பேரணியில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கையில் வைத்திருந்ததாகக் கூறப்படும் தங்க நிற கோல் அல்லது செங்கோல் போன்ற பொருள் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

இந்தப் பொருள் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. சில தரப்பினர் இதனை அதிர்ஷ்டம் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய பொருளாகவும், ஜோதிட ஆலோசனைகளின் அடிப்படையில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறுகின்றனர்.

மேலும், மகிந்த ராஜபக்சவின் ஜோதிட நம்பிக்கை, அவர் அணியும் மோதிரங்கள் மற்றும் தாயத்துக்கள் தொடர்பான விவாதங்களும் இதனுடன் இணைத்து சமூக ஊடகங்களில் மீண்டும் பேசப்பட்டு வருகின்றன.

No comments: