News Just In

8/16/2024 04:47:00 PM

திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆசிரியர் அணி வெற்றி!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆசிரியர் கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டு, நடாத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலை ஆண் ஆசிரியர்களுக்கிடையிலான மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் திருகோணமலை, ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி ஆசிரியர் அணி இறுதிப் போட்டியில் வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 92 ஓட்டங்களைப் பெற்றது. பதிலக்குதுடுப்படுத்தாடிய திருகோணமலை ஆர்.கே.எம்.ஶ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி ஆசிரியர்கள் அணி 7.3 ஓவர்களில் 1 விக்கட் இழப்பிற்கு 98 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.




இப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரராக திரு.த.நிறோசன் ஆசிரியரும்,
சிறந்த பந்து வீச்சாளர் - திரு .க.கோபிநாத் ஆசிரியரும் தெரிவு செய்யப்பட்டனர்.

No comments: