News Just In

8/05/2024 03:03:00 PM

காதலன் ஏமாற்றிவிட்டதாக இளம் பெண் உயிர்மாய்ப்பு..! மட்டக்களப்பில்சம்பவம்


மட்டக்களப்பில் இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த இளம்பெண் தனது காதலனான பொலிஸ் அதிகாரி தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து தற்கொலை செய்துகொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த யுவதி காதலன் ஏமாற்றி விட்டதாக தெரிவித்து பதிவேற்றம் செய்யப்பட்ட குறுந்தகவல்கள் மற்றும் காதலனான பொலிஸ் அதிகாரியின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: