(அஸ்ஹர் இப்றாஹிம்)
கெயார் லங்கா அறக்கட்டளையின் ஈராண்டு பூர்த்தி விழா மற்றும் பரிசளிப்பு விழா ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு பிரதான மண்டபத்தில் அறக்கட்டளையின் ஸ்தாபகப் பணிப்பாளர் திருமதி அருச்சுனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது கெயார் லங்கா அறக்கட்டளையின் மூலம் கடந்த வாரம் நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளின் மாணவர்களுக்கு இடையே நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மலையக மாணவர்களின் கல்விக்காக ஒன்றிணைவோம் எனும் மேற்படி நிழ்வில் இலங்கை திறந்த பல்கலைக்கழக ஓய்வுநிலை பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ் , நுவரெலியா கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் எம். கணேஷராஜ், ஹைலன்ஸ் கல்லூரியின் அதிபர் ராஜன், உதவி அதிபர் திருமதி. தேன்மொழி, கெயார் லங்கா அறக்கட்டளையின் பணிப்பாளர் டாக்டர் ரமேஷ்குமார், உறுப்பினர்களான திரு. கணேஷன் இளையராஜா, செல்வி. பிளசினா, திரு.ரூபதர்ஷன், பாசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும்
பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments: