News Just In

8/24/2024 07:48:00 AM

மட்டக்களப்பில் அதிரடி சோதனை ! சிக்கிய உணவகங்கள்




மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஐந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பான கண்காணிப்பு 22.08.2024 பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி இராசரெட்ணம் முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது

இதில் பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதிநாகரெட்னம் சரவணபவன் உட்பட எட்டு வைத்தியர்கள், 2 உணவு மருந்து பரிசோதகர்கள், 2 மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் 4 மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் ,17 சுகாதார பரிசோதகர்களும் பங்கு பற்றினார்கள்.கண்காணிப்பு குழுவின் மூலம் 32 உணவகங்கள் பார்வைக்குட்படுத்தப்பட்டு அவற்றுள் 23 உணவகங்களில் பாவனைக்கு உதவாத உணவுகள் கைப்பற்றிப்பட்ட தோடு 17 உணவகங்களுக்கெதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் மூன்று உணவகங்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments: