(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் வருடாந்தம் நடைபெறும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட டிவிஷன் 111 கிறிக்கட் சுற்றுத் தொடரின் அம்பாறை மாவட்டத்திற்கான லீக் போட்டியில் 57 ஓட்டங்களினால் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டியது.
கடந்த (17) சனிக்கிழமை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தினை எதிர்த்து சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டு கழகம் மோதி இருந்தது .பரபரப்பான ஆட்டத்தில் 57 ஓட்டங்களினால் விவேகானந்தா விளையாட்டுக்கழகம் வெற்றி வாகை சூடியது .
முதலில் துடுப்பெடுத்தாடிய காரைதீவு விவேகானந்த விளையாட்டுக்கழகம் 43.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் 26.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 141 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
இப்போட்டியில் துடுப்பாட்டத்தில் 49 ஓட்டங்களையும் பந்திவீச்சில் 6 விக்கெட்களையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை காரைதீவு விவேகானந்த விளையாட்டுக்கழக வீரர் கே.பிரசாந்த் பெற்றுக் கொண்டார்.
No comments: