News Just In

7/29/2024 02:37:00 PM

மாணவர்களின் வணிகக்கல்வி மற்றும் கணக்கியல் பாட அடைவு மட்டத்தை அதிகரிக்க நடவடிக்கை!

அக்கரைப்பற்று கல்வி வலய மாணவர்களின் வணிகக்கல்வி மற்றும் கணக்கியல் பாட அடைவு மட்டத்தை அதிகரித்தல்
(அஸ்ஹர் இப்றாஹிம்)



அக்கரைப்பத்து கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் தரம் 10 மற்றும் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்களது பரீட்சை பெறுபேறுகளை மேம்படுத்துவதனை இலக்காகக் கொண்டு வணிகக் கற்கைகள் மற்றும் கணக்கியல் ஆசிரியர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான செயலமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது.

ஆசிரியர் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாணவர்களை சிறப்பாக ஈடுபடுத்துவதற்கும் அவர்களின் கல்வி முடிவுகளை உயர்த்துவதற்கும் மேம்பட்ட உத்திகள் இதன் போது பரிமாறப்பட்டன.

வளவாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீட பேராசிரியர்களான எம்.ஐ.எம்.ஹிலால் எம்.ஸீ.அப்துல்
நாஸர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

No comments: