News Just In

7/29/2024 11:59:00 AM

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!





வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலை இலக்குவைத்து இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு ஒரு அரசாங்கம் நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல முடியாது. தற்போது வாகனங்களை தவிர ஏனைய அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக நீக்கப்படும், முதல் காலாண்டில் வணிக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களுக்கு அனுமதி வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்

No comments: