(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் அவர்களின் ஆலோசனையிலும் வழிகாட்டலிலும் பாடசாலை இணைப்பாடத்திற்குப் பொறுப்பான உதவி அதிபர் எம்.எப்.றிஸ்வி ஹாதீம் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் பாடசாலை ஒழுக்காற்றுப் பிரிவினரால் மாணவத் தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நடைபெற்றது.
இத் தலைமைத்தூவ பயிற்சியில் கல்முனை சாஹிறா தேசிய கல்லூரி ஆசிரியர் மேஜர்.கே.எம்.தமீம் பிரதான வளவாளராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் ஒழுக்காற்றுப் பிரிவு பொறுப்பாசிரியர் எம்.எப்.எம். றிபாஸ் ,விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ.ஆபாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments: