மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மாவட்டச் செயலகத்தில் புதனன்று 11.02.2026 சந்திப்பு இடம்பெற்றது.
தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட பாலங்களை இந்திய இராணுவத்துடன் இணைந்து நிர்மாணிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தில் தித்வா புயலினால் பல பாலங்கள் பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. மேற்படி பழுதடைந்துள்ள பாலங்கள் தொடர்பான தெளிவூட்டல்கள் அதிகாரிகளினால் வழங்கப்பட்டன.
மேலும் நிபுணர் குழுவினர் பாதிக்கப்பட்ட பாலங்களுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவ அதிகாரிகளுடனான சந்திப்பின்போது வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளர் என். கதிசன், நிறைவேற்று பொறியியலாளர் எஸ். கிரிசாந்தன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் கே. வில்வராசா, பொறியியலாளர் எஸ். கலாதரன் மாவட்டச் செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வி. நவதீதன், ரி. நிர்மலராஜ் உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments: