News Just In

2/13/2026 06:36:00 PM

SAFE அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி இன்று வழங்கி வைப்பு!

 SAFE அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி இன்று வழங்கி வைப்பு!


குமுகாய மேம்பாட்டு மன்றம்-கிழக்கு(SAFE) அமைப்பின் வழிகாட்டுதலுக்கு அமைய கனடிய McGill,Concordia மற்றும் University de Montreal தமிழ் மாணவர் சங்கத்தின் நிதி உதவியின் கீழ்  மட்/கரடியனாறு ம.வி. மாணவர்கள்  60பேருக்கும், மட்/பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய மாணவர்கள் 20பேருக்கும் கற்றல் உபகரணங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

   


 இந்நிகழ்வில் குமுகாய மேம்பாட்டு மன்றத்தின் (SAFE) அங்கத்தவர்களான மா.லட்சுதன்,கி.சேயோன்,ம.சுரேஷ்காந்தன்,ந.திவாகர் ஆகியோருடன் மண்முனை மேற்கு பிரதேச சபையின் பிரதி தவிசாளர் தருமலிங்கம் டிசாந்தும் பங்கு கொண்டார்  .

No comments: