
சிவராத்திரியையொட்டி கல்லடி உப்போடை கொக்கட்டி ஈஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்றன.சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி தினத்தையொட்டி இன்று மட் டக்களப்பில் உள்ள சிவன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றன.
உலகை ஆளும் சிவபெருமானின் அற்புதங்கள் நிகழும் ஆலயங்களில் மட் டக்களப்பில் சிறப்பு பெற்ற ஆலயத்தில் பொதுமக்களால் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.
கல்லடி உப்போடை கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் அடியார்கள் தங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற இங்குள்ள கொன்றை மரத்தில் நேர்த்திக் கடன்களைக் கட்டி வழிபடும் ஆலயமாக இது சிறப்பு பெற்றுள்ளது
தேவார பாராயணங்கள் மூலம் வழிபாடுகள் இடம்பெறும் ஆலயத்தில் அடியார்களின் பூஜை பொருள்களை வைத்தே இங்கு வழிபாடுகள் ஆகம முறைப்படி இடம் பெற்று வருகின்றன.
மட்டக்களப்பு கல்லடி உப்போடை கொக்கட்டி ஈஸ்வரர் ஆலய பிரதம குரு தம்பிப்பிள்ளை தவராஜா தலைமையில் இன்று சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம் பெற்றன. அப்போது அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்
No comments: