News Just In

7/29/2024 02:55:00 PM

மட்டக்களப்பில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு ஆளுநர் ஆரம்பித்து வைத்தார்




மட்டக்களப்பு,மண்முனை தெற்கில் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார்



(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தொலைநோக்கு பார்வையின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயிகளை அபிவிருத்தி செய்வதற்கான விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மட்டக்களப்பு மண்முனை தெற்கில் ஆரம்பித்து வைத்தார்.

விவசாயச் சங்கங்கள் தங்களுடைய மரக்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைத்து நல்ல விலையைப் பெற முடியும் வகையில் மண்முனை தெற்கில் குளிர்சாதனக் கிடங்குகள் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வியாழேந்திரன் உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்க கொண்டனர்.

No comments: