News Just In

7/26/2024 08:42:00 PM

சுதந்திரக்கட்சியின் கூட்டத்திற்கு முச்சக்கரவண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி




சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் வந்து இறங்கியுள்ளார்.

இக்கூட்டமானது, இன்று (26.07.2024) அத்துருகிரியவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்திகு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் வந்து இறங்கியமை விசேட அம்சமாகும்.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்த நிலையில், ​​தேர்தல் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளமையினால் சட்டங்களுக்கு மதிப்பளித்து அரச வாகனங்களை பயன்படுத்தாது முச்சக்கர வண்டியில் வந்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.

இந்த சந்திப்பில் நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்சவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




No comments: