News Just In

7/18/2024 04:26:00 PM

வாகன இறக்குமதி குறித்து நிதி இராஜாங்க அமைச்சரின் புதிய தகவல்!




எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குள் வாகனங்களை இறக்குமதி செய்யும் விதம் தொடர்பிலான செயற்பாடுகளை ஆரம்பிக்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர்,

"அதிக மின்சார வாகனங்களை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகிறோம். வாகனங்களை எப்படி இறக்குமதி செய்வது என்பது குறித்த ஆயத்தத்திற்கு தயாராக உள்ளோம். இது தொடர்பான குழுவின் அறிக்கை ஓகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்." என்றார்

No comments: