News Just In

7/19/2024 05:36:00 PM

கிரிக்கெட் வீரரை சுட்டு கொலை செய்தவர் கைது!





இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தம்மிக்க நிரோஷனை அவரது வீட்டிற்கு முன்பாக வைத்து சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

தம்மிக நிரோஷனா அல்லது ஜோன்டியை கொலை செய்வதற்காக மூன்று சந்தேகநபர்கள் வந்துள்ளதாகவும் மற்றைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

48 வயதான சந்தேகநபர் பலபிட்டிய ரன்தொம்பே பிரதேசத்தில் வைத்து 2,800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அணிந்து வந்த ஆடைகளையும் எல்பிட்டிய குற்றப்பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து பெறப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபர் பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு ஓகஸ்ட் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments: