News Just In

7/04/2024 04:35:00 PM

சாய்ந்தமருது நகரசபை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு: கல்முனைக்கான தடை நீடிப்பு!



மாளிகைக்காடு செய்தியாளர்

உயர் நீதிமன்றில் இன்று (04) எடுத்துக் கொள்ளப்பட்ட சாய்ந்தமருது நகர சபை தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் 24.02.2025 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதுவரை கல்முனை மாநகர சபைக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடையும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கின் மனுதாரர்களான முன்னாள் பிரதேச செயலாளரும் இலங்கையின் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியுமான ஏ.எல்.எம் சலீம் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் அஸீம் ஆகியோர் பிரசன்னமாகியிருந்து குறிப்பிட்டத்தக்கது.

No comments: