News Just In

7/22/2024 12:56:00 PM

முக்கோண மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் புதுவெளி விளையாட்டுக்கழகம் சம்பியனானது!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
முசலி சமூக பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் ஊடாக நடத்தப்படும் கிராம மட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு வீரர்களை தயார்படுத்தும் ஐந்தாவது முக்கோண மென்பந்து கிரிக்கட் சுற்றுத்தொடர் கூழாங்குளம் அல் ஹிக்மா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இச்சுற்றுப்போட்டியை ஐக்கிய தேசிய கட்சியின் சிலாவத்துறை அமைப்பாளர் ஜே. ரிஸ்வி அவர்களின் ஒருங்கிணைப்பில் இளைஞ்சர் சேவை அதிகாரி தன்ஸீம் அவர்ளின் மேற்பார்வையில் கூழாங்குளம் அல் ஹிக்மா அணியினருக்கும் புதுவெளி விளையாட்டு கழகத்தினருக்கும் நடைபெற்ற இறுதிப்போட்டியில் புதுவெளி விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று கிண்ணத்தினையும் பரிசுத்தொகையையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பிரபல சமூக சேவையாளரும் தொழிலதிபரும் முசலி கூட்டுறவு சங்கத்தின் உப தலைவர் சலாகுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்த்திருந்தார்.

No comments: