News Just In

7/25/2024 10:15:00 AM

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளருக்கு திடீர் இடமாற்றம்: மக்கள் போராட்டம்!




மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் ஜீ.அருணனின் இடமாற்றத்தை கண்டித்து பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ள தமது பிரதேச செயலாளரை மீளவும் வாகரையில் பணியாற்ற அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

வாகரை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக சுமார் 2 மணித்தியாலங்கள் வாகரை பிரதேச செயலக நிர்வாக பணிகள் தடைப்பட்டன. போராட்டத்தின் இறுதியில் தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை அரசாங்க அதிபர், பொது நிர்வாக அமைச்சு, பிரதமர்,ஜனாதிபதி உள்ளிட்டோர்களுக்கு முகவரியிட்டு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகஸ்த்தர் வ.சிவரஞ்சனிடம் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.

No comments: