News Just In

7/22/2024 09:45:00 AM

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் இறுதிப்பேட்டியில் வெற்றிவாகை சூடியது ஜவ்னா கிங்ஸ்!





லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் இறுதிப்பேட்டியில் வெற்றி பெற்று ஜவ்னா கிங்ஸ் அணி கிண்ணத்தைச் சுவீகாித்தது.

காலி மார்வெல்ஸ் மற்றும் ஜவ்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜவ்னா கிங்ஸ் முதலில் களத்தடுப்பை தொிவு செய்தது.

அதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய காலி மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.

185 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஜவ்னா கிங்ஸ் 15.4 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் 185 ஓட்டங்களை பெற்று எல்.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது.

No comments: