News Just In

7/16/2024 02:17:00 PM

"கிளப் வசந்த"வின் இறுதிச் சடங்கு தினத்தில் தனது 38 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய கஞ்சிப்பானை இம்ரான்!




கிளப் வசந்த” என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதி சடங்கு நடைபெற்ற தினத்தன்று பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கஞ்சிப்பானை இம்ரான்” தனது 38 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பிறந்த நாள் நிகழ்வு கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய நண்பர்களுடன் மிகவும் கோலாகலமாக கப்பலில் கொண்டாடப்பட்டுள்ளது.

“கிளப் வசந்த” என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவை கொலை செய்வதற்கு துபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லொக்கு பெடி” என்பவருக்கு அறிவுறுத்தல் வழங்கியது “கஞ்சிப்பானை இம்ரான்” என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No comments: