(எஸ்.அஷ்ரப்கான்)
உலக குருதி கொடையாளர் தினத்தை சிறப்பிக்கும் வகையில்
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இரத்த தானம் வழங்கியவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 2024.07.21 ஆம் திகதி கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.ரஹ்மானின் வழிகாட்டலில் இடம் பெற்ற இந்நிகழ்விற்கு
பிரதம அதிதியாக,கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பொதுச் சுகாதாரம் மற்றும் திட்டமிடலுக்கு பொறுப்பான சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.பாறூக் அவர்கள் கலந்து கொண்டதுடன் குருதிக்கொடை ஏற்பாட்டாளர்கள் சார்பில் கெளரவ அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் குரூப் நிறுவனத்தின் பணிப்பாளருமான றிஸ்லி முஸ்தபா ஆகியோரும் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், குருதி நன்கொடையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு குருதி கொடையாளர்கள் பலர் அதிதிகளால் பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
No comments: