
பல வர்த்தகர்களுக்கு கார்பன் காசோலைகளை வழங்கிய பெண் ஒருவரை கைது செய்ய அம்பாறை பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்ற போது, பெண்ணின் தாயார் பொலிஸாருக்கு இடையூறு விளைவிப்பது கையடக்க தொலைபேசியில் பதிவாகியுள்ளது.
குற்றவியல் பலாத்காரம், சந்தேகநபருக்கு தப்பிச் செல்ல உதவி செய்தமை மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடையை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரின் தாயார் கைது செய்யப்பட்டு அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
பின்னர், அம்பாறை நீதவான் நவோமி விக்கிரமரத்ன, ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்தார்.
எவ்வாறாயினும், இச்சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபரின் மகள் அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: